பரித்தித்துறை மீனவர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனான விசேட ஒன்றுகூடல் – தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை நாம் முதலில் நிறுத்த தயார்.. வடக்கு மீன்பிடி அமைச்சருக்கு மக்கள் தம் கருத்துக்களை தெரிவித்தனர்.

394

 பரித்தித்துறை மீனவர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனான விசேட ஒன்றுகூடல் – தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை நாம் முதலில் நிறுத்த தயார்.. வடக்கு மீன்பிடி அமைச்சருக்கு மக்கள் தம் கருத்துக்களை தெரிவித்தனர்…
யாழ்ப்பாணம் பரித்தித்துறை சுப்பர்மடத்தில் 06-04-2015 மாலை இடம்பெற்ற திடீர் விசேட சந்திப்பின் போது அப்பகுதியில் உள்ள மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து  வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களையும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களையும் அழைத்து தமது பிரச்சினைகள் தொடர்பிலும் தேவைகள் தொடர்பிலும் தெரிவித்தனர்.
இதன்போது வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் மக்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தமது மீன்பிடி அமைச்சு என்பது மாகாணத்தின் நன்னீர் மீன்பிடியையே பிரதானமாக கொண்டது என்றும், கடந்த வாரம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் கடற்றொழில் தொடர்பாக சில விடயங்களை மாகாண அளவில் செய்வதற்கு தமக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், எனவே எதிர்காலத்தில் எமது மீன்பிடி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்படும் என்றும், முதலில் நாம் பயன்படுத்தும் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை நிறுத்துவதன் மூலம் என்னய்யா இந்திய மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய வருகையை குறைத்து எமது மக்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் எனவும் தெரிவித்த வேளை அதற்க்கு மக்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தனர்.
unnamed (1)
SHARE