வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யாது அவர்களுக்கு வாக்குரிமையை வழங்காமல் இருந்திருந்தால் இன்றும் மஹிந்த ராஜபக்சவே ஜனாதிபதி என முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிலாபம் பஸ் தரிப்பிட அங்குரார்ப்பண வைபவத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் திட்டத்திற்கு 200 நாட்கள் வரையிலேனும் ஒத்துழைப்பு வழங்கத் தயார்.
எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற மற்றும் பிரதேச சபை முறைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். நல்லாட்சி திட்டத்தின் கீழ் அபிவிருத்திக்காக பதினெட்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
300 வீடுகளை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.