வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் உள்ள தந்தை செல்வாவின் திருவுரு சிலைக்கு மலர்மாலை அணிவித்து நினைவு நாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் வவுனியா ‘தாயகம்’ அலுவலகத்தில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளைத் தலைவரும் வடமாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம், வவுனியா நகரசபையின் முன்னாள் நகரபிதா எஸ்.என்.ஜி.நாதன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் க.சிவலிங்கம் மற்றும் கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.