மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி இலங்கை இராணுவத்தால் திட்டம் இட்டுச் செய்யப்பட்ட ஒரு செயல் – மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப்

626

 

மன்னார் திருக்கேதீஸ்வர மனித புதைகுழி இலங்கை இராணுவத்தால் திட்டம் இட்டுச் செய்யப்பட்ட ஒரு செயல் – மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப்
IMG_20150407_151811
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் ராஜப்பு ஜோசப் தினப்புயல் இணையத்தளத்திற்கு இவ்வாறு தெரிவித்தார்.
1389925347_2545446_hirunews_human-bone elumpukudu mannar-415x260 mannar-skeleton-5-415x260
கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக மன்னார் திருக்கேதீஸ்வர புதைகுழி விவகாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 89 எழும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இன்னமும் இது உத்தியபூர்வமாக நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. ஆய்வு அறிக்கைகளில் தான் இந்த ஆண்டுக்குள் இந்த சடலங்கள் கொலை செய்யப்பட்டன என்பதை அடையாளம் காணமுடியும். இது இந்திய இராணுவம் காலப்பகுதியில் கொலைசெய்யப்பட்டது என்பதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் இது திட்டம்மிட்டு இலங்கை இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்ட மனித புதைகுழியாகும். வெகுஜன அமைப்புக்கள் இது தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்து இருந்தனர். மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி அகழ்வு பணிகள் மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த அகழ்வுப் பணியின் பின்னரும், பகுப்பாய்வு செய்யப்பட்ட பின்னரும் தான் இதனை எந்த காலப்பகுதியில் இருந்த இராணுவத்தினர்கள் செய்தார்கள் என்பதனை உறுபதிப்படுத்தமுடியும். என்றும் அவர் தெரிவித்தார்.

மன்னார் திருகேதீஸ்வரம் மனித புதைக்குழிக்கு அருகில் இருக்கும் சந்தேகத்திற்குரிய கிணற்றில் அகழ்வுகளை மேற்கொண்டு 10 நாட்களுக்குள் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட நீதிபதி நேற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பொலிஸாருக்கு பிறப்பித்திருந்தது. எனினும் அப்படி சந்தேகத்திற்குரிய கிணறு அந்த பிரதேசத்தில் இல்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

எனினும் மன்னார் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த, மன்னார் வெகுஜன அமைப்புகள், அப்படியான கிணறு ஒன்று இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்தினால், நீதிமன்றத்திற்கும், பொலிஸாருக்கும் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தன.

மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மன்னார் மாவட்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட அமைப்புகளின் உதவியுடன் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதுமாத்திரம் இன்றி மன்னார் திருகேதீஸ்வரம் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட 89 மனித எலும்புக் கூடுகள் குறித்த அறிக்கை இதுவரை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. எனவே அதனை துரிதமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE