மாந்தை மனிதபுதை குழி தொடர்பான வழக்கு யூலை 6க்கு ஒத்திவைப்பு

401

மாந்தை புதை குழி தொடர்பான வழக்கு கடந்த திங்கள்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரனைக்காக எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரணை செய்த மன்னார் மாவட்ட நீதிபதி அலெக்ஸ்ராஐh ஆசீர்வாதம் கிரேசியன் வழக்கினை எதிர்வரும் யூலை மாதம் 6ம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தார்

DSC05452 unnamed-1148

இதன்போது குற்றபுலனாய்வு திணைக்களம் சார்பாக பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க தலைமையில் சார்ஐன்ட் சொய்சா உட்பட நான்கு குற்றபுலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மன்றில் ஆஐராகி இருந்தனர் இவர்களுடன் மன்னார் மாவட்ட நில அளவையாளர் ஏ.திலீப்குமாரும் ஆஐராகியிருந்தார்.

காணாமல்போனோர் சார்பாக சட்டத்தரணி ஐp.இராஐகுலேந்திரா தலைமையில் சட்டத்தரணிகள் வீ.எஸ்.நிறைஞ்சன், செல்வி ரனித்தா ஞானராஐh ஆகியோர் ஆஐராகி இருந்தனர்.

குற்றவியல் திணைக்களம் சார்பாக தோன்றிய சார்ஐன்ட் சொய்சா மன்றில் தெரிவிக்கையில் ஏற்கனவே அகழ்வுப் பணி நடைபெற்ற பகுதியில் 1950 க்கு முன்பு இருந்து மயானம் இருந்ததாகவும் அந்தப் பகுதியில் இருந்த பொது மக்களிடம் இருந்தும் பெரியவர்களிடம் இருந்தும் தாங்கள் தகவல்கள் சேகரித்ததாகவும் அந்த இடத்தில் ஒரு பொது மயானமும் அத்துடன் அவ்விடத்தில் ஒரு பொது வைத்தியசாலை இருந்ததாகவும் தங்களுக்கு தெரியவந்ததாகவும் சார்ஐன்ட் சொய்சா மன்றில் தெரிவித்தார்.

அதுமட்டும் இன்றி தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் எல்லாம் சமயமுறைப்படி புதைக்கப்பட்டுள்ளதாக அதன் ஆதரமாக கைகள் கால்கள் கட்டப்பட்டிருந்ததாகவும் அவர் மன்றில் தெரிவித்ததுடன் தோண்டப்பட்ட எலும்புக் கூடுகள் சமய ஆசாரப்படியே புதைக்கப்பட்டிருந்தாகவும் இதனால் இப் பகுதியில் தொகையாக எவரும் புதைக்கப்படவில்லை என அவர் தெரிவித்து ஒரு அறிக்கை சமர்பித்தார்.

இதற்கு பதில் வாதம் புரிந்த காணாமல் போனவர்கள் சார்பாக ஆஐராகியிருந்த சட்டத்தரனி ஐp.இராஐகுலேந்திரா தனது வாதத்தில் தற்பொழுது குற்றபுலனாய்வு பிரிவால் முன்வைக்கப்படும் இந்த கருத்து இதனால் வரைக்கும் இந்த நீதிமன்றில் குற்றபுலனாய்வு பிரிவினரால் அறிக்கை சமர்பிக்கப்படவில்லை எனவும்
அத்துடன் மன்னார் நகர சபை தலைவரால் இவ் நீதிமன்றுக்கு ஒரு சத்தியக் கூற்று அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது அதாவது அந்த இடத்தில் ஒரு பொது மயானம் இருக்கவில்லை இதற்கான எவ்வித சான்றுகளும் எமது நகர சபை பதிவு ஏடுகளில் காணப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்
அத்துடன் அப்பகுதி பங்கு தந்தையால் இவ் மன்றுக்கு சமர்பிக்கப்பட்டிருக்கும் சத்தியக் கூற்றிலும் மயானம் இருக்கவில்லை என்றும,; எமது பங்கு தேவாலயம் இது சம்பந்தமான எந்த சான்றும் கொண்டிருக்கவில்லையெனவும் சத்தியக் கூற்று சமர்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் மன்றுக்கு தெரியப்படுத்தினார்.

இரு பகுதினர்களினதும் வாத பிரதிவாதங்களை செவிமடுத்த நீதிபதி இதைத் தொடர்ந்து குற்றத்தடுப்பு பொலிசாரிடம் அடுத்த தவணைக்குள் இந்தப் பகுதியில் ஒரு மயானம் இருப்பதாக நீங்கள் தெரிவித்திருப்பதால் இதை உறுதிப்படுத்தும் வண்ணம் சகல ஆதாரங்களுடன் இவ் மன்றுக்கு அறிக்கை சமர்பிக்கும்படியும் அத்துடன் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள எலும்புக் கூடுகளின் நிலைமையின் அறிக்கையும் சமர்பிக்கும்படியும் அத்துடன் சட்டவைத்தியர் வைத்தியரத்தனவின் அறிக்கையையும் சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் இது 06.07.015 அன்று மன்றில் சமர்பிக்கும்படியும்
இதைத் தொடர்ந்து 17.08.2015 லிருந்து 21.08.2015 வரையான காலப்பகுதியில் அடையாளம் காட்டப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் நீதிபதி அலெக்ஸ்ராஐh ஆசீர்வாதம் கிரேசியன் உத்தரவு பிறப்பித்தார்.

SHARE