
ஜி.வி.பிரகாஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவரது இசையில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஐங்கரன், ஜெயில் உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அறிமுக இயக்குனர் அகிலன் இயக்கும் இந்த புதிய படத்தை நவீரா சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
