நடிகர் பிரித்விரா​​​ஜ்க்கு உறுதியான கொரோனா தொற்று

153

மலையாள திரைப்பட நடிகர் பிரித்விரா​​​ஜ் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மலையாள திரைப்பட உலகில் புகழ் பெற்ற நடிகர் பிரித்விராஜ், தமிழில் கனா கண்டேன் என்ற படத்தில் அறிமுகம் ஆனவர்.

பின்னர் மொழி, ராவணன் ஆகிய பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், ஜன கன மன என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை நாங்கள் கடுமையாக கடைப்பிடித்தோம். பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம்.

விதிகளின்படி, படப்பிடிப்பில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் கொரோனாவுக்கான மருத்துவ பரிசோதனை செய்து கொண்டோம்.

இதன்பின்னர் படப்பிடிப்பின் இறுதி நாளன்று முடிவில், பரிசோதனைகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டன. இதில், இந்த முறை எனக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன்.

எனக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை. நலமுடனே இருக்கிறேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்திகொள்ளும்படியும், பரிசோதனை மேற்கொள்ளும்படியும் கேட்டுகொள்கிறேன்.

குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்புவேன். என் மீது அன்பு கொண்டவர்களுக்கு எனது நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.

SHARE