
நெட்ப்ளிக்ஸ்
பிரபல ஒடிடி தள சேவையான நெட்ப்ளிக்ஸ் இந்தியாவில் குறுகிய காலக்கட்டத்திற்கு இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. இது விளம்பர நோக்கில், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இலவச சலுகையானது ஸ்டிரீம்பெஸ்ட் எனும் பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை டிசம்பர் 4 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு வார இறுதிநாட்களில் நெட்ப்ளிக்ஸ் சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த 48 மணி நேரத்திற்கு பயனர்கள் நெட்ப்ளிக்ஸ் சேவையில் பதிவு செய்யவோ, கட்டணம் செலுத்தவோ அவசியம் இல்லை. இதுவரை 30 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படுகிறது. எனினும், இதனை பயன்படுத்த பயனர் தங்களின் விவரங்களை வழங்க வேண்டும். ஸ்டிரீம்பெஸ்ட் சேவை நிறைவுறும் போது எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.