
கீர்த்தி சுரேஷ்
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்து 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார்.
இயக்குனர் மெஹர் ரமேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த ‘பில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார். வேதாளம் படத்தில் அஜித்தை அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால், அது லட்சுமி மேனன் கதாபாத்திரம் தான். தெலுங்கில் இந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
