மன்னாரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழு ஒன்று மன்னார் பொலிசாரினால் நேற்று ஞாயிற்றுகிழமை கைது செய்யப்பட்டுள்ளது.
மன்னார் இரகசிய பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குற்றத்தடுப்பு பொலிசார் வட மாகாணத்தின் பல பாகங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒரு பெண் உட்பட நான்கு (4) பேரை கைது செய்துள்ளனர்.
மன்னார் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன அழகக்கோன் மற்றும் மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜ.பீ.ரி.சுகதபால ஆகியோரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி அஜந்த டொற்றிகோ மற்றும் குற்றத்தடுப்பு பொலிஸ் அதிகாரி ரத்ண மணல ஆகியோரின் தலைமையிலான பொலிஸ் குழு குறித்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.
சமீப காலமாக மன்னாரில் பல இடங்களில் இரவு வேளைகளில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று வந்தது.
இது தொடர்பாக பொலிசார் மேற்கொண்டு வந்த விசாரனைகளை தொடர்ந்து குறித்த பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பதின் ஜந்திற்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளை உடைத்து இரவு வேளைகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இக் குழுவிடம் இருந்து இருபத்தி நான்கு இலச்சத்து இருபதாயிரத்தி எண்ணூறு (2,420,800.00) ரூபாய்கள் பெறுமதியான நகை,லப்டப், கையடக்க தொலைபேசிகள், டிஜிரல் கமரா ஆகியன பொலிசார் கைபற்றியுள்ளன.;
கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் 2013ம் ஆண்டுமுதல் 2014ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் பதிநான்கு இலட்சத்தி ஐம்பத்தெட்டாயிரமும் (1,458,000.00) 2015ம் ஆண்டு ஒன்பது இலச்சத்து அறுபத்தி இரண்டாயிரத்தி எண்ணூறு (962,800.00) ரூபா பெறுமதி வாய்ந்த பொருட்களும் கொள்ளையிட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொள்ளையிடப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களின் தேசிய அடையாள அட்டைகள் மூன்றும் கொள்ளையில் ஈடுபட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்கள் வட மாகாணத்தில் பல இடங்களில் சுழற்சி முறையில் கொள்ளை சம்வங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
இவர்களை இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மன்னார் தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயசம யுயெனெ – ஆயயெச