
சிரஞ்சீவி சர்ஜா – மேக்னா ராஜ் தம்பதியின் குழந்தை
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இவரது மனைவி மேக்னா ராஜ். இவரும் பிரபல நடிகை ஆவார். சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். மறைந்த கணவனே குழந்தையாக பிறப்பார் என எதிர்பார்த்து காத்திருந்த மேக்னா ராஜுக்கு கடந்த 22-ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது.
