சிம்புவுக்கு, பரதம் கற்று கொடுத்த சரண்யா மோகன்

164
விஜய்யின் ரீல் தங்கையிடம் பரதம் கற்கும் சிம்பு.... வைரலாகும் புகைப்படம்

சிம்பு
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, தற்போது சுசீந்திரன் இயக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் 30 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. சிம்புவின் இந்த அதிரடி மாற்றம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், நடிகர் சிம்பு பரதநாட்டியம் கற்று வருகிறாராம். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பது நடிகர் விஜய்யோட ரீல் தங்கை தான். வேலாயுதம் படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த சரண்யா மோகன் தான் சிம்புவுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுத்துள்ளார்.
விஜய், சரண்யா மோகன், சிம்புமேலும் சிம்பு ஈஸ்வரன் படத்திற்காக பரதநாட்டியம் கற்கவில்லை என்றும், அவரின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே கற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
SHARE