பிக் பொஸ் வீட்டில் நீதிபதியானார் பாடகி சுசித்ரா!

167

றிந்ததே.

அந்தவகையில் இந் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்குகள் சுவராசியமாக இருப்பதால் நிகழ்ச்சியும் சுறுசுறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது என்பதும், போட்டியாளர்களில் ஒருசிலரை தவிர மற்ற அனைவரும் டாஸ்குகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இன்று அளிக்கப்பட்டுள்ள புதிய டாஸ்க்கில் நீதிமன்றம் போல் அமைக்கப்பட்டு அதில் போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் மீது குற்றஞ்சாட்டலாம் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு போட்டியாளரும், வீட்டில் இருக்கும் மற்றவர்கள் மீதான கருத்துவேறுபாடுகளை பதிவு செய்யலாம் என டாஸ்க்கில் கூறியதை அடுத்து, போட்டியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

எதிர்பார்த்தபடியே சனம் மீது பாலாஜியும், பாலாஜி மீது சனம்ஷெட்டியும் குற்றஞ்சாட்டுகின்றனர். புதிதாக பிக்பொஸ் வீட்டுக்குள் வந்த சுசித்ரா இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியாகிறார்.

பாலாஜி, சனம் ஆகிய இருவரும் மாறி மாறி ஆவேசமாக விவாதம் செய்யும் காட்சிகள் முதல் புரமோவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீதிமன்றத்தில் குற்றவாளிகள் யார் யார் என தீர்ப்பளிக்கப்படவுள்ளது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

SHARE