பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் குறித்து நடிகை சமந்தா

173
‘பிக்பாஸ்’ அனுபவம் எப்படி இருந்தது? - விவரிக்கும் சமந்தா

சமந்தா
தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். சில தினங்களுக்கு முன்பு சினிமா படப்பிடிப்பு இருந்ததால் அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. எனவே அவருக்கு பதிலாக நடிகை சமந்தா தொகுத்து வழங்கினார்.
இந்த அனுபவம் பற்றி அவர் கூறும்போது, “இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்தது இல்லை என்பதால் அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. சினிமாவில் நடித்ததோடு சரி, தெலுங்கும் சரளமாக பேச வராது. அங்குள்ள போட்டியாளர்களை எப்படி கையாள்வது என்றெல்லாம் பயமாக இருந்தது. ஆனால் நாகார்ஜுனா உன்னால் முடியும் போ என்று தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார்.
சமந்தா
அங்கு எனது மைத்துனர் அகில் வந்திருப்பதை பார்த்ததும் சகஜமானேன். நிகழ்ச்சியை உற்சாகமாக தொகுத்து வழங்கினேன். நிகழ்ச்சி முடிந்தபிறகு பலரும் என்னை பாராட்டினர். இப்போது என்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது” என்றார்.
SHARE