பார்வையற்றவர்களுக்கு புது அப்டேட்டில் வழங்கப்படும் ஐபோன்

356
பார்வையற்றோருக்கு உதவும் அசத்தல் ஐபோன் அம்சம்

ஐபோன் 12 ப்ரோ
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் அப்டேட் பார்வை குறைபாடு கொண்டவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற உதவுகிறது. இந்த அம்சம் பார்வையற்றவர்கள் அருகில் மனிதர்கள் எத்தனை தூரத்தில் உள்ளனர் என்பதை கணக்கிட்டு தெரிவிக்கிறது.
மக்கள் அருகில் இருப்பதை கண்டறிவதுடன் மக்கள் எத்தனை தூரத்தில் உள்ளனர் என்ற தகவலையும் இந்த அம்சம் தெரிவிக்கிறது. இந்த அம்சம் ஒஎஸ்14.2 அப்டேட் கொண்ட ஐபோன் 12 ப்ரோ மற்றும் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மாடல்களில் பயன்படுத்த முடியும்.
 ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இந்த அம்சம் ஆப்பிள் நிறுவனத்தின் ஏஆர்கிட் சார்ந்த ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி பிளாட்பார்மில் இயங்குகிறது. ஏஆர்கிட் 4-இல் புத்தம் புதிய டெப்த் அப்ளிகேஷன் ப்ரோகிராமிங் இன்டர்பேஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது லிடார் ஸ்கேனர் மூலம் டெப்த் விவரங்களை அறிந்து கொள்ளும்.
பின் அறிந்து கொண்ட விவரங்களை துல்லியமாக கணக்கிட்டு பயனர்களுக்கு தெரிவிக்கிறது. ஆப்பிள் நிறுவனம் சமீபத்திய ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபேட் ப்ரோ போன்ற சாதனங்களில் அதிநவீன லிடார் ஸ்கேனரை வழங்கி இருக்கிறது
SHARE