
கணவருடன் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் தேனிலவுக்காக கணவருடன் இணைந்து விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார் காஜல் அகர்வால். எந்த ஊருக்குச் செல்கிறார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. எனினும் பயணம் குறித்த பதிவுகளை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.