கடும் மழை காரணமாக மஸ்கெலியா லக்சபான தோட்ட எமில்டன் பிரிவில் உள்ள ஏழு குடும்பங்கள் அடங்கிய லயம் ஒன்றின் பின் பகுதியின் மண் திட்டுசரிந்ததால் அக்குடியிருப்புகளில் சமையல் அறைகளில் சுவர் இடிந்துமண் உள்ளே புகுந்துள்ளது. ஆகையால் அக்குடியிருப்பைசேர்ந்த 35 குடும்ப அங்கத்தவர்களை அக்குடியிருப்பைவிட்டு வெளியே சென்று தங்குமாறு நல்லத்தண்ணி பொலிஸ் அதிகாரி அணில் ஐயசிங்க தெரிவித்தார். தொடர்ந்தும் இப்பகுதியில் மழை பெய்துவருவதால் அக்குடும்பங்கத்தவர்களை வேறு இடங்களில் தங்கவைக்க தோட்டநிர்வாகம் ஏற்பாடு செய்துவருகின்றது.
செ.பெருமாள்
மஸ்கெலியா நிருபர்