மேதகு இராயப்பு ஜோசப்பு ஆண்டகைக்கு: 75 அகவை வாழ்த்து!

359
யாரால், எங்கே, எப்பொழுது, என்ன,
எப்படி, யாருக்கு, ஏன், என வினவி
பகுத்து விளைவை அறிந்து வாழ
ஊக்கும் காலப்பெருந்தகையை!
 
ஊழிப்பெரு வெள்ளத்தில் 
அடித்துச்செல்லப்படும் 
தமிழ் சமுகத்தை 
காப்பாற்றிக்கரை சேர்க்க
உழைக்கும் கருணைப்பேழையை!
 
பற்றிப்படர்ந்து பரவி 
கைப்பிடித்து நடக்க 
‘வழிகாட்டி’ ஆக உதவும்   
காலக்கைத்தடியை!
 
‘அகவை எழுபத்து ஐந்தில்’ 
எழுவான் திசையில் 
ஒளிக்கீற்றாய் 
இருளைக்கிழித்து வழியை 
முழுதும் காட்ட 
உச்சிமோர்ந்து மெச்சி 
வாழ்த்தி அகமகிழ்வுகொள்கிறோம். 
 
மெத்த கனிவுடன்…
-நாங்கள் இயக்கத்தினர்- 
(மக்கள் ஆட்சி அரசியலுக்கான உந்துசக்தி இயக்கம்)
16.04.2015.
unnamed (1)
SHARE