ஜோசப்வாஸ் நகர் நற்கருணை நாதர் ஆலயம் மன்னார் ஆயரினால் திறந்து வைப்பு

346

 

ஜோசப்வாஸ் நகர் நற்கருணை நாதர் ஆலயம் மன்னார் ஆயரினால் திறந்து வைப்பு
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் நற்கருணை நாதர் ஆலயம் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களினால் இன்று வியாழக்கிழமை (16) காலை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் திருகோணமலை ஆயர் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ,பதுளை ஆயர் வில்சன் பெனாண்டோ, மட்டகிளப்பு ஆயர் பொன்னையா ஜோசப், யாழ் ஆயர் தோமஸ் சவுந்திரநாயகம், கண்டி ஆயர் வியானி பெனாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது இத் திருப்பலியில் அருட்சகோதரர்கள்,அருட்சகோதரிகள்,துறவிகள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான இறைபக்தர்கள் கலந்து கொண்டனர்.

75 பிறந்த தினத்தை இன்று கொண்டாடும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் திருப்பலியின் நிறைவில் கேக் வெட்டினார். பின் ஆயருக்கு கௌரவம் அழிக்கப்பட்டு நினைவு சின்னங்கள் பலராலும் வழங்கிவைக்கப்பட்டது.

SHARE