கொவிட்-19 :ஜப்பானில் தடுப்பு பணியில் ஈடுபடும் ரோபோ!

347

ஜப்பான் கடையில்   ரோபோவொன்று கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிது ஈர்த்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரோபோவீ (Robovie) எனப் பெயரிடப்பட்ட குறித்த  ரோபோவானது வாடிக்கையாளர்களிடம் முக கவசங்கள் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்றும்படி அறிவுறுத்துகின்றது.

இதற்காக ரோபோவுடன் இணைக்கப்பட்டுள்ள கெமரா மற்றும் முப்பரிமாண லேசர் அலைக்கற்றை தொழி நுட்ப உதவியுடன் இப் பணிகளை ரோபோவீ மேற்கொள்கிறது.

மேலும் கடையில் வாடிக்கையாளர்கள் தேவையான உடைகளை தெரிவு செய்யவும் இந்த ரோபோ உதவி புரிகிறது.

SHARE