ரெட்மிக்கு போட்டியாக உருவாகும் லெனோவோ ஸ்மார்ட்போன் சீரிஸ்!

430

லெனோவோ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. லெனோவோ புது ஸ்மார்ட்போன் சீரிஸ் நவம்பர் 26 ஆம் திகதி சீனாவில் அறிமுகமாகிறது.

புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் லெமன் சீரிஸ் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. டீசர்களின் படி மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என தெரிகிறது. மேலும் இது பார்க்க தலைகீழாக ரெட்மி டீசர் போன்றே காட்சியளிக்கிறது.

லெனோவோ லெமன் சீரிஸ் மொடல்கள் குறைந்த விலையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இது அதிக வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் லெனோனோ நிறுவனம் லெமன் பிராண்டு ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் விற்பனை செய்து வந்தது.

எனினும், இவற்றின் விற்பனை ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டது. அந்த வகையில் இந்த பிராண்டு மீண்டும் விற்பனைக்கு வர இருப்பது தெரியவந்துள்ளது.

SHARE