ஜனாதிபதி தேர்தல் முடிந்த கையோடு நாட்டை விட்டு வெளியேறியிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தனது பாரியாருடன் இன்று நாடு திரும்பியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து டுபாய் வழியாக அவர்கள் பயணப்பட்டு வந்த EK 348 ரக எமிரேட்ஸ் விமானம் தற்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அவரை வரவேற்கக் குழுமியுள்ளதால், விமான நிலைய உள் நுழைவாயில் தற்போது மூடப்பட்டுள்ளது..
ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பசில் ராஜபக்சவைக் கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரை விசாரிக்கும் நிமித்தம் நாட்டுக்கு அழைத்து வர நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டதையடுத்து, சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த அவர் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்களால் விமான நிலையத்தில் வைத்து பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளதுடன், பௌத்த துறவிகள் அவருக்கு ஆசீர்வாதமும் வழங்கி அழைத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதிக்கு தற்காலிக மூடுவிழா
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் (ARRIVAL) பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் பகுதி மூடப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தின் பயணிகள் வருகைப் பகுதிக்கு வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் வருகை காரணமாக இவ்வாறு விமான நிலையத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெரும் எண்ணிக்கையிலானவர்கள் விமான gps signal not found pokemon go நிலையத்திற்கு வெளியே குழுமியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பசிலை வரவேற்க வந்த கூட்டம்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பாரிய கூட்டம் ஒன்று கூடியுள்ளது.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திகாந்தன், வட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமார, மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்சா உட்பட அரசியல்வாதிகள் பலர் வருகை தந்துள்ளனர்.