புவியீர்ப்பு சக்தி இல்லாத சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், முள்ளங்கிச் செடிகளை வெற்றிகரமாக வளர்த்த நாசா

390

மைக்ரோகிராவிட்டி எனப்படும் புவியீர்ப்பு சக்தி இல்லாத சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், முள்ளங்கிச் செடிகளை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளதால், எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு  புதிய உணவை அளிக்கும் திட்டத்துடன், இம் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது.

செடிகள் வேர் விடுவதற்கு அத்தியாவசியமான புவியீர்ப்பு சக்தி இல்லாததால், தலையணை போன்ற வடிவமைப்பு ஒன்றில், உரம் மற்றும் நீர் கிடைக்கும் வகையில் இச்  செடிகள் வளர்க்கப்பட்டதாகவும் சிவப்பு மற்றும் நீல ஒளி உமிழும் விளக்குகள் வாயிலாக அவற்றுக்கு வெப்பம் ஊட்டப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும்  அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி கட்டுப்பாட்டு அறையிலிருந்து, விஞ்ஞானிகள் முள்ளங்கிச் செடிகள் வளர்வதை சென்சர்கள் வாயிலாக கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE