திருடர்களிடம் தொலைபேசியை பறிகொடுத்த நடிகர் கௌதம் கார்த்திக்

166

நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர், கடல், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித் உள்ளிட்ட சில  படங்களில் நடித்துள்ளார்.

இந் நிலையில்  தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்ட கௌதம் கார்த்திக், அதிகாலை மெரினா வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இதன் போது  சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த  திருடர்கள் அவரிடம் வழிபறி செய்ய மிரட்டியுள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற கௌவுதம் கார்த்திக்கை கீழே தள்ளி விலையுர்ந்த தொலைபேசியை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

இதையடுத்து தகவலறிந்து வந்த மயிலாப்பூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி கெமராப்  பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

SHARE