கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இயங்காது காணப்பட்ட வளலாய் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையை இன்று செவ்வாய்க்கிழமை வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா திறந்துவைத்தார்.
பாடசாலையின் அதிபர் கே.ரவீந்திரன் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண சபையின் உறுப்பினர்களான அ.பரஞ்சோதி, பா.கஜதீபன், கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், பணிப்பாளர் செ.உதயகுமார், யாழ்ப்பாணம் கல்வி வலய கல்விப்பணிப்பாளர் எஸ்.தெய்வேந்திரராசா, கோப்பாய் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ.சற்குணராசா உட்பட பலர் கலந்துகொண்டனர்