பிக்பொஸ் புகழ் கவினுக்குத் திருமணம்?

173

பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகர் கவின், ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் ’லிப்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வினித் வரபிரசாத் இயக்கி வரும் இந்தப் படத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்த அம்ரிதா ஐயர் நாயகியாக நடித்து வருகிறார்.

இந் நிலையில் கவினுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் அவர் காதலித்து வரும் பெண்தான் மணப்பெண் என்றும் கூறப்படுகிறது. கவின் மற்றும் மணப்பெண் ஆகிய இருதரப்பினரும் திருமணம் குறித்து பேசி முடித்து விட்டதாகவும் விரைவில் கவின் தனது திருமணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

பிக்பொஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர் லொஸ்லியாவை கவின் காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதும் காதல் குறித்து இருவருமே எதுவும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் லொஸ்லியாவின் தந்தை காலமான நிலையில் அவருடைய திருமணம் இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என்பதால் கவினை திருமணம் செய்யவிருப்பது வேறு பெண் தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

SHARE