ஸ்பெயினில் பரிசோதிக்கப்பட்ட 550 குதிரை வலு கொண்ட அதிவேக மின்சாரக் கார்கள்

401

ஸ்பெயினில் 550 குதிரை வலு கொண்ட அதிவேக மின்சாரக் கார்கள் இயக்கி பரிசோதிக்கப்பட்டன. பார்முலா இ கார்பந்தய நிறுவனரால் எக்ஸ்ட்ரீம் இ எனும் பெயரில் அதிவேக மின்சாரக் கார்களுக்கான (Extreme-e electric rally) போட்டி பல சுற்றுகளாக சவுதி அரேபியா, செனகல், கிரீன்லாந்து, பிரேஸில், ஆர்ஜென்டீனா  நாடுகளில் நடத்தப்படவுள்ளது.

இதில் முதல் சுற்று, சவூதி அரேபியாவின் பாலைவனத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இதில் 550 குதிரை வலு கொண்ட 21 அதிவேக மின்சாரக் கார்கள் பங்கெடுக்கவுள்ளன.

அந்தப் போட்டிக்கு தயாராகும் வகையில் கார்கள் அனைத்தும், ஸ்பெயினின் மோட்டார் லேண்ட் அரகான் மைதானத்தில் அதிவேகமாக இயக்கி பரிசோதிக்கப்பட்டன.

SHARE