இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்த ‘காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி’ உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மாபெரும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் மீண்டும் 8 ஆவது முறையாக இவர்கள் இணைகின்றனர். இதனை செல்வராகவன் தனது ட்விட்டரில் நேற்று பதிவிட்டுள்ளார்
மேலும் இத் திரைப்படத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கிறார் என்பதும் கலைபுலி தாணு தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.