மன்னாரின் பல கிராமங்களின் பல்வேறுபட்ட சமூகங்களை நேரில் சென்று சந்தித்தார் – வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர்
மன்னார் தீவுப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்களை அவர்களது கிராமங்களின் குறைநிறைகளை அறியும் நோக்கோடு 22-04-2015 புதன் தனது விஜயத்தை கிராமங்கள் தோறும் மேற்கொண்டார் வடக்கு மாகான கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள். அதன் அடிப்படையில் பேசாலை 50 வீட்டுத்திட்டம், பேசாலை 100 வீட்டுத்திட்டம், துள்ளுக்குடியிருப்பு, வசந்தபுரம், நடுக்குடா, பாவிலுபட்டங்கட்டிகுடியிருப்பு, கவயன்குடியிருப்பு, கீளியன்குடியிருப்பு, செல்வேரி, பருத்திப்பண்ணை, கட்டுக்காரன்குடியிருப்பு, பூலாருகுடியிருப்பு, படப்பிடி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு அப்பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் செய்வதாகவும் வீதிகள், மின்சாரம் போன்ற சில பிரச்சினைகளை உடன் தீர்த்து வைப்பதாகவும் தெரிவித்தார், அத்தோடு சந்திப்பின் போது மக்களுக்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மூலம் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு சறம், சேலை என்பனவும் வழங்கிவைத்தார்.