தரக்குறைவான பௌத்த கொடிகள்

368

தரக்குறைவான பௌத்த கொடிகளை விற்பனைக்கு வைத்திருந்த புறக்கோட்டை, பீபல்ஸ் பார்க் கடைகளை சுற்றிவளைத்த நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள், தரக்குறைவாகத் தயாரிக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் பௌத்த கொடிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

பௌத்த கொடிகளில் காணப்பட வேண்டிய முறையே நீலம், மஞ்சள், சிவப்பு மற்றும் இளமஞ்சம் ஆகியவை, இடம்மாறி தயாரிக்கப்பட்டிருந்ததாக நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரசபைக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்படி கடைகளுக்குச் சென்ற அதிகாரிகள், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பௌத்த கொடிகள், வெசக் அலங்காரப் பொருட்கள் மற்றும் பௌத்த பிக்குமார்களுக்கு வழங்கப்படும் ‘அட்டபிரிகர’ பொதிகள் ஆகியவற்றை சோதனைக்கு உட்படுத்திய போதே மேற்படி தரம் குறைந்த கொடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடமும் இவ்வாறான 300 சுற்றிவளைப்புக்களை நடத்தி தரமற்ற கொடிகள் மற்றும் உபகரணங்களைக் கைப்பற்றியதாக நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

SHARE