இந்த நாட்டை நிறைவேற்று அதிகாரத்துடன் இதற்கு முன் ஆட்சி செய்த யாரும் தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க செயலளவில் விட்டுக்கொடுக்க முன் வந்ததில்லை- சோபித தேரர்.

389

இந்த நாட்டை நிறைவேற்று அதிகாரத்துடன் இதற்கு முன் ஆட்சி செய்த யாரும் தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க செயலளவில் விட்டுக்கொடுக்க முன் வந்ததில்லை ஆனால் முதற் தடவையாக ஜனாதிபதியொருவர் அவ்வாறு முன் வந்திருக்கிறார் ஆனாலும் அதற்கு அரசியல்வாதிகள் தடையாக இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார் சோபித தேரர்.

ஐமசுமு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், இது ஒரு அரிய சந்தர்ப்பம். தவறானவர்களின் கைகளில் நிறைவேற்று அதிகாரம் மீண்டும் செல்லக்கூடாது என்பதில் அனைவரும் தெளிவாக இருக்கம் இத்தருணத்தில் அப்பதவியில் இருந்து கொண்டே அதனை விட்டுக்கொடுக்க ஜனாதிபதி முன் வரும் போது அதனை எதிர்ப்பவர்கள் எதிர்காலத்தைப் பற்றி நன்கு சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE