சித்தப்பாவிடம் அப்பாவிற்கு தெரியாமல் ஓடிய நாமல்!

357

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தம்பியாரான பசில் ராஜபக்ச தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து பசில் வந்த சமயத்தில், அது பற்றி மகிந்தவிடம் கேட்டபோது, “அப்படியா.. பசில் வந்துள்ளாரா? என ஆச்சரியமாக கேட்டிருந்தார். இந்த விடயத்தை நேற்று வெளியிட்டிருந்தோம்.

உண்மயில் இந்த விடயம் மகிந்தவிற்கு தெரியாமல் இருந்ததா அல்லது தெரியாததைப் போல நடித்தாரா என்பதை மகிந்த வீட்டில்த்தான் கேட்க வேண்டும். ஆனால் இதில் இன்னொரு சுவாரஸ்யமாக சம்பவம் நடந்துள்ளது.

பசில் வந்தது மகிந்தவிற்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாமலிற்கு தெரிந்திருக்கிறது. ஏனெனில், நேற்று நிதிக்குற்றப்பிரிவிற்கு பசில் வாக்குமூலமளித்த பின்னர் கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

இரவு ஒன்பது மணியளவில் பசில் கொண்டு செல்லப்பட்டபோது, மகிந்தவின் மகனும் சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்சவும் அங்கு ஆஜராகியிருந்தார்.

சித்தப்பாவிற்காக ஆஜராக நாமல் வந்ததாவது மகிந்தவிற்கு தெரிந்திருக்குமோ தெரியாது

SHARE