ரிஷாத் பதியுதீனின் அமைச்சில் பல கோடி ரூபா நிதி மோசடியாம்!

378

 

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அமைச்சில் பல கோடி ரூபா நிதி மோசடி செய்யப்பட்டதாக ஒரு சிங்கள இணையம் தவறான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. உண்மைக்கு மாறான அந்தச் செய்தியை படித்தவுடன் அதிர்ச்சியடைந்த நான், உடனடியாக அந்த இணையத்தின் ஆசிரியரை தொடர்பு கொண்டு குறித்த செய்தி தொடர்பில் எனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டேன். அத்துடன் உடனடியாக அந்தச் செய்தியை அகற்றுமாறும் கேடடுக் கொண்டதுடன் உண்மை நிலைமைகளை தெளிவுபடுத்தினேன்.

83

ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால அறிவிக்கப்பட்ட பின்னர் மஹிந்த அரசிலிருந்தும் அமைச்சுப் பொறுப்புகளிலிருந்தும் ரிஷாத் பதியுதீன் விலகிய பின்னர் அவரது அமைச்சுக்குரிய பெருந்தொகை பணம் பிற தேவைகளுக்காக அன்றைய அரசினால் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் நான் அறியக் கிடைத்தது. அப்படி நடந்திருந்தாலும் இந்த விடயத்துக்கும் ரிஷாத் பதியுதீனுக்கும் தொடர்பில்லை. அப்போது அவர் அமைச்சராக இருக்கவில்லை. இது அப்பட்டமானதும் தவறானதுமான செய்தியுமாகும்.

முன்னாள் ஆட்சியாளர்கள் காலத்தில் இடம்பெற்ற பல நிதி மோசடிகள் தொடர்பில் இன்று பல விடயங்கள் அம்பலமாகிக் கொண்டிருக்கும் நிலையில் எனது சமூகத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் அமைச்சர் மீது அபாண்டம் சுமத்துவதன் மூலம் சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்ல… முஸ்லிம் அரசியல்வாதிகளும் நிதி மோசடி செய்வதாக காடடுவதற்காக இட்டுக் கட்டப்பட்ட அநியாயமான செய்தி இதுவாகும்.

இந்த நாட்டின் முக்கிய முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்கள் கடந்த கால அரசில் அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் அன்றோ அதற்கு முன்னரோ அரசாங்க நிதியை மோசடி செய்யவும் இல்லை. அப்படியான முஸ்லிம் தலைவர்களாக அவர்களும் இல்லை. அவர்கள் மிகத் தூய்மையானவர்கள். இஸ்லாமிய மார்க்க நெறியைப் பின்பற்றுபவர்கள்.தென்னிலங்கை சிங்கள சக்திகளிடம் எனது சமூக அரசியல் தலைமைகளை தவறான கண் கொண்டு பார்க்கச் செய்யாதீர்கள்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்பான செய்தியை உடனடியாக நீங்கள் அகற்ற வேண்டும். இன்றேல் நானும் வேறு விதமாகச் செயற்பட வேண்டி வருமென ஆத்திரத்துடன் தொலைபேசியில் கத்தினேன்.

அதற்கு அவர்கள் நீங்கள் கூறுவதால் இதனை நாங்கள் நம்புகிறோம். அத்துடன் அந்தச் செய்தி கிடைத்த விதம் குறித்தும் நாங்கள் ஆராய்வோம். உங்களது வேண்டுகோளின்படி உடனடியாக அந்தச் செய்தியை அகற்றி விடுகிறோம். என்று கூறினார். இதுவெல்லாம் இடம்பெற்று விட்டு ஐந்து நிமிடமும் செல்லவில்லை அந்தச் செய்தியை உடனடியாக நீக்கி விட்டார்கள்.

பின்னர் அவருடன் மீண்டும் தொடர்பு கொண்டு எனது நன்றியைத் தெரிவித்தேன்

– ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

SHARE