திருடர்களை பாதுகாக்கும் பாராளுமன்றம் அவசியமில்லை

391

 

லஞ்சம் மற்றும் ஊழல் மோசடியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 
நாட்டில் தற்போது நிலையான அரசாங்கம் ஒன்றுக்கான தேவை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.  100 நாள் வேலைத் திட்டம் தொடர்பில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
திருடர்களை பாதுகாக்கும் பாராளுமன்றம் அவசியம் இல்லை என்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு செல்ல மறுப்பது ஏன் என தெரியவில்லை என ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அன்று ஆகாயத்தில் பறந்தவர்கள் பாராளுமன்றில் ஒருநாள் இரவு தரையில் உறங்கும் அளவிற்கு நல்லாட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.  மக்கள் பெற்ற வெற்றியை கொள்ளையடிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது என அவர் கூறினார்.  அடுத்த தேர்தலில் ராஜபக்ஷக்களை விரட்டி புது பாராளுமன்றம் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

SHARE