
ஒப்போ என்கோ எக்ஸ்
ஒப்போ நிறுவனம் தனது ரெனோ5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுடன் என்கோ எக்ஸ் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் கஸ்டம் அகௌஸ்டிக் டிசைன், மேம்பட்ட மென்பொருள் கொண்டுள்ளது.
இந்த இயர்பட்ஸ் டூயல் மைக்ரோபோன் டிசைன் கொண்டிருக்கிறது. இது நாய்ஸ் கேன்சலிங் வசதியை நான்குவித மோட்களில் வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாரு இசையின் ஒலியை செட் செய்து கொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் அனைத்து சூழல்களிலும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
மேலும் இந்த இயர்பட்களில் ஒப்போ DBE 3.0 சவுண்ட் சிஸ்டம் மற்றும் LHDC போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை சீரான ஆடியோ அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன.
இவைதவிர ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி, டச் கண்ட்ரோல் வசதி, டூயல் மைக்ரோபோன், 47m ப்ளூடூத் லோ-லேடென்சி டூயல் டிரான்ஸ்மிஷன், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியும், 4 மணி நேர பேக்கப் வழங்கும் 44 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 25 மணி நேர பேக்கப் வழங்கும் வகையில் சார்ஜிங் கேசில் 535 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஒப்போ என்கோ எக்ஸ் இயர்பட்ஸ் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.