சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2021 தீபாவளி தினமான நவம்பா் 4-ஆம் திகதியன்று திரைப்படம் வெளியாகும் என்று சன் பிக்சா்ஸ் நிறுவனம் அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளது. ‘அண்ணாத்த தீபாவளிக்குத் தயாராகுங்கள்’ என தனது ருவிட்டர் பக்கத்தில் சன் பிக்சா்ஸ் தரப்பு பகிா்ந்துள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலா் நடிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தை சன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றியும், இசையமைப்பாளராக இமானும் பணிபுரிந்து வருகிறாா்கள்.