
முற்பதிவு செய்திடும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் S21 Ultra உடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Galaxy Buds Live, Galaxy SmartTag கிடைக்கப்பெறுகின்றன. அத்தோடு ஒரு முறைக்கான இலவச திரை மாற்றீடும் செய்துகொள்ள முடியும். அதே போல் S21+ அல்லது S21 உடன் Galaxy Fit2, Galaxy SmartTag ஆகியன கிடைக்கப்பெறுவதுடன் ஒரு முறைக்கான இலவச திரை மாற்றீடும் செய்துகொள்ள முடியும்.
இம்மூன்று சாதனங்களுமே அதிவேக 5G ready (இலங்கையில் வணிக ரீதியாக 5G வலையமைப்பு கிடைக்கக்கூடிய தன்மையைப் பொறுத்து இயலுமையைக் கொண்டுள்ளவை) இயலுமையைக் கொண்டுள்ளவை என்பதுடன் Samsung இற்கே உரிய Exynos 2100 chipset செயற்திறனையும் கொண்டுள்ளவை.
இலங்கையில் Galaxy S21 Series, Phantom Black, Phantom Silver, Phantom Violet மற்றும் Phantom Grey ஆகிய நான்கு கண்கவர் வர்ணங்களில் கிடைக்கப்பெறுகின்றன.
The Galaxy S21 Series இனை 21 ஜனவரி 2021 முதல் நாடு முழுவதும் உள்ள அதிகாரம் பெற்ற முகவர்களான Softlogic Mobile Distribution மற்றும் John Keells Office Automation ஆகிய இடங்களில் முற்பதிவு செய்து கொள்ள முடியும். அடையாளம் காணுவதற்கு இலகுவாக வர்த்தக நாம குறியீடு பொருத்தப்பட்டு இருக்கும். அத்தோடு இத்தெரிவுகள் அனுமதி பெற்ற பங்காளர்களான Softlogic Retail, Singer, Singhagiri மற்றும் Damro விலும் அத்தோடு வலையமைப்பு பங்காளர்களான Dialog மற்றும் Mobitel இடமும் ஒன்லைன் தளங்களான Samsung Estore, Daraz.lk, MySoftlogic.lk மற்றும் Kapruka.com மூலமும் முற்பதிவுகளைச் செய்துகொள்ள முடியும்.