ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட பிரதிநிதிகளின் மாநாடு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.இன்று முற்பகல் இம்மாநாடு அங்குனுகொலபெலஸ்ஸ நகர சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இம்மாநாட்டில் சபாநாயகர் ஷமல் ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா, ஏ.எச்.எம். பௌசி, நிருபமா ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, வீ.கே. இந்திக, கமலா ரணதுங்க ஆகியோரும், அம்பாந்தோட்டை மாவட்ட மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
அம்பாந்தோட்டை மாவட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறப்பிடமாகவும்,அரசியல் கோட்டையாகவும் திகழ்கின்றது.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப்பின்னர் நடைபெறுகின்ற அம்பாந்தோட்டை பிரதிநிதிகளின் முதலாவது மாநாடு இதுவென்பதோடு மகிந்தவின் கோட்டையில் மைத்திரி தலைமையேற்று மாநாட்டை நடத்தியிருப்பது மகிந்தவிற்கு விடுத்திருக்கும் சவாலாக இது அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றார்கள.