செம்மனி புதைகுழியின் கதானாயகி ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க யுத்தத்தில் வென்றபோதும், சமானத்தில் வெற்றிபெறவில்லை

412

இன்று நாம் யுத்­தத்­திலே வெற்றி பெற்­றி­ ருக்­கின்றோம். ஆனால், சமாதானத்தை வெற் றிகொள்ளவில்லை. பல யுத்த வெற்­றி­யாளர்
கள் சமா­தா­னத்தை வெற்றி கொண்­ட­தில்லை என்­பது சரித்­திரம். ஏனென்றால், “சமா­தா­னத்தை வெற்­றி­கொள்ள வித்­தி­யா­ச­மான மனப்­பாங்கு அவ­சியம்” என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.
நேற்று மாலை பம்­ப­லப்­பிட்டி புதிய கதி­ரேசன் மண்­ட­பத்தில் இடம்­பெற்ற தந்தை செல்­வாவின் 38 ஆவது நினைவுப் பேரு­ரை யில் கலந்து கொண்டு ‘யுத்தம் இல்­லை­யென்­பது சமா­தா­ன­மா­கி­வி­டாது’ என்ற தலைப்பில் உரை­யாற்­றிய போதே இவ்­வாறு தெரி­வித் தார். அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கை யில்,
தந்தை செல்வா அவர்­களை எனக்குத் தெரியும். எனது தந்­தை­யா­ருடன் வந்து பேசி­ய­போது அவரை நான் சந்­தித்­தி­ருக்­கிறேன்.
டாக்டர் நாக­நா­த­னு­டைய கடைசி மகள் எனது நண்­பி­யா­க­வி­ருந்த கார­ணத்­தி­னாலே அங்கே நேரம் செல­வி­டு­கின்­ற­போது, சில­வேளை அங்­கேயும் அவரை சந்­தித்­தி­ருக்­கின்றேன். அவ­ரை­யொரு நேர்­மை­யான அர­
சி­யல்­வா­தி­யென நாம் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்றோம். இன்று அவ­ரு­டைய நினைவுப் பேரு­ரை­யினை வழங்­கு­கின்­ற­போது இனங்­க­ளுக்கும் மதங்­களுக்கும் இடை­யி­லான பிள­வுகள், பிரச்­சி­னைகள் உலகில் ஏற்­ப­டு­கின்­றதைப் பற்றி சில
சிந்­த­னை­களை உங்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­ளலாம் என நினைக்­கின்றேன். அப்­ப­டி­யான பிள­வுகள், பிரச்­சி­னை­க­ளுக்­கான கார­ணங்கள், அவற்றை தீர்த்­துக்­கொள்­வ­தற்­கான சில வழி­மு­றை­க­ளையும் பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கின்றேன்.
இலங்­கையை நாம் எடுத்து நோக்­கு­மே­யானால், 1948 ஆம் ஆண்டு சுதந்­திரம் கிடைத்த நாள் முதல் பெரும்­பான்மை இனம் தன்­னு­டைய ஆதிக்­கத்தால் மற்­ற­வர்­களை புறக்­க­ணித்து அதி­கா­ரங்­களை தம்­மு­டைய கைகளில் வைத்­துக்­கொண்­டதன் கார­ண­மாக பல­வித பிரச்­சி­னைகள் எழுந்­தன. இனங்­க­ளு­டைக்­கி­டையில், மொழி­க­ளுக்­கி­டையில், மதங்­க­ளுக்­கி­டை­யி­லான புறக்­க­ணிப்­புக்­க­ளி­னாலும் அனை­வ­ரையும் இணைத்­துக்­கொள்­ளாத ஒரு மனப்­பாங்­கிலும் இந்தப் பிரச்­சி­னைகள் எழுந்­தன.
இவ்­வா­றான பல சம்­ப­வங்கள் இந்தக் கால­கட்­டத்தில் இடம்­பெற்­றன. அனை­வ­ரையும் இணைத்­துக்­கொள்­ளாமல், பெரும்­பான்­மை­யி­ன­ராக இருக்­கின்ற கார­ணத்­தி­னா­லேயே மற்­ற­வர்­களை புறக்­க­ணித்து பெரும்­பான்மை பலத்­தோடு ஆட்சி செய்­த­தனால் சிறு­பான்மை இனத்­த­வர்கள் தமது பிரச்­சி­னை­களை முன்­கொ­ணர வேண்டி ஏற்­பட்­டது.
இதன் கார­ண­மா­கத்தான் பல இடங்­களில் இந்த அநி­யா­யத்­திற்கு எதி­ராக குரல் கொடுக்க முடி­யாத நிலையில் அவர்கள் வன்­மு­றையை நாட வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டது.
ஓர் இனத்தின் மன­தி­லே­யி­ருந்த எதிர்­பார்ப்­புகள் தகர்க்­கப்­ப­டு­மாக இருந்தால் அது வெடி­குண்­டாக மாறும் என்று ஓர் அறிஞர் கூறி­யி­ருக்­கின்றார். பெரும்­பான்மை இனம் தம்­மு­டைய அர­சியல் பலத்தை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காக ஒரு பிர­சா­ரத்தை மேற்­கொண்­டது. அதா­வது, மற்­ற­வர்கள் எதி­ரிகள் என்ற பிர­சா­ரத்தை மேற்­கொண்டு அவர்­களை எதி­ரி­க­ளாக சித்­தி­ரித்து அதன் மூல­மாக பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளு­டைய அதி­கார பலத்தை தாங்கள் வைத்­துக்­கொள்­கின்ற ஒரு யுக்­தியை பல நாடு­க­ளிலே கையாள்­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இலங்­கை­யிலும் அதுதான் நடந்­துள்­ளது.
சுதந்­தி­ர­ம­டைந்த காலந்­தொட்டு வடக்கு மற்றும் கிழக்கு மக்­க­ளு­டைய புறக்­க­ணிப்பு பல விதங்­க­ளிலே இருந்­தன. பொரு­ளா­தா­ர­மாக இருக்­கலாம், அர­சியல் அதி­கா­ர­மாக இருக்­கலாம், அவர்­க­ளு­டைய மேற்­ப­டிப்­பாக இருக்­கலாம், வேலை­வாய்ப்­பாக இருக்­கலாம் இவை­ய­னைத்­திலும் புறக்­க­ணிக்­கப்­பட்டு அவர்கள் வெளியில் விடப்­பட்ட கார­ணத்­தினால், இங்­கேயும் வன்­மு­றைகள் ஆரம்­பித்­ததை நாம் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.
பாரா­ளு­மன்­றத்­தி­லேயும் இவ்­வாறு ஜன­நா­ய­கத்தில் எண்­ணிக்­கையில் குறை­வாக இருக்­கின்ற கார­ணத்­தி­னா­லேயே இங்கே நிலைமை மிகவும் மோச­ம­டைந்­துள்­ளது. உண்­மை­யான ஐக்­கியம் ஏற்­பட வேண்­டு­மானால் வேற்­று­மையை ஏற்­றுக்­கொண்டு அந்த வேற்­று­மையின் சிறப்பை வெளிப்­ப­டுத்­து­கின்ற ஓர் அபிப்­பி­ரா­யத்தின் மூல­மா­கத்தான் அந்த ஐக்­கியம் ஏற்­பட முடி­யுமே தவிர, வேற்­று­மை­யினால் மாறு­பட்­ட­வர்கள், மற்­ற­வர்கள் என்று அடக்­கியோ புறக்­க­ணித்தோ ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது.
இன்று நாம் போரிலே வெற்றி பெற்­றி­ருக்­கின்றோம். ஆனால் சமா­தா­னத்­தினை வெற்­றி­கொள்­ள­வில்லை. ஆனால் பல யுத்த வெற்­றி­யா­ளர்கள் சமா­தா­னத்தை வெற்­றிக்­கொள்­ள­வில்லை என்­ப­துதான் சரித்­திரம். ஏனென்றால், சமா­தா­னத்தை வெற்­றி­கொள்­வ­தற்கு வித்­தி­யா­ச­மான மனப்­பாங்கு அவ­சியம். தாழ்­மை­யாக மற்­ற­வர்­களை சேர்த்துக் கொள்­கின்ற மாறு­பட்ட சிந்­த­னைகள் அவ­சி­ய­மாக இருக்­கி­றது.
இந்த நாட்டின் சமூ­கங்கள் சுதந்­தி­ர­ம­டைந்த காலம் தொட்டு ஜன­நா­யக முறைப்­படி தங்­க­ளு­டைய உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தற்­காக பல காலம் உழைத்­தார்கள், போரா­டி­னார்கள். முதலில் சம உரி­மை­களை கோரி­னார்கள். பின்னர் அது கிடைக்­கா­த­போது சமஷ்டி ஆட்சி முறையை கேட்­டார்கள். அதையும் செவி­ம­டுக்­காத போது தனி­நாடு கோரி­னார்கள். இவை­ய­னைத்தும் தொடர்ச்­சி­யாக புறக்­க­ணிக்­கப்­பட்­டதன் விளை­வா­கத்தான் வன்­முறை உரு­வா­னது.
தந்தை செல்வா அவர்கள், தமிழ் சமூ­கத்தின் உரி­மைக்­காக செய்ய வேண்­டிய அனைத்­தையும் செய்தார். பல ஒப்­பந்­தங்­களில் கைச்­சாத்­திட்டார். சிங்­கள தீவி­ர­வாதக் குழுக்கள் சிறு சிறு குழுக்­க­ளாக இருந்­த­போதும் அர­சி­ய­லிலே அந்­தந்த கால­கட்­டத்­தி­லி­ருந்த பெரும்­பான்மை கட்­சி­க­ளோடு தம்மை இணைத்­துக்­கொண்டு இந்த ஒப்­பந்­தங்­களை நிறை­வேற்­ற­வி­டாது தடுத்­தமை எமது நாட்டின் வர­லாறு.
1956 இல் சிங்­களம் மட்டும் அர­ச­க­ரும மொழி­யாக்­கப்­பட்­ட­போது அது வேண்­டு­மென்றே செய்­யப்­பட்ட ஒன்­றல்ல. வெளி­நாட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து விடு­பட்ட எமது நாட்டை சுய­மொழி, சுய­க­லா­சா­ரத்தை வெளிக்­கொ­ணர வேண்­டு­மென்ற அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக முத­லிடம் கொடுக்­கப்­பட்­ட­துதான் உண்மை. ஆனால் அந்த நேரத்தில் விடப்­பட்ட தவறு என்­ன­வென்றால் மற்ற மொழி­களை பேசு­கின்­ற­வர்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டனர். வேற்­று­மொ­ழி­யா­கிய ஆங்­கிலம் அதி­லி­ருந்து வெளியே விடப்­பட்­டது.
இதன் கார­ண­மாக அந்தத் தரு­ணத்­தி­லே­யேயும் எண்­ணிக்­கை­யிலே சிறு­பான்­மை­யி­னர்கள் நாட்டின் ஐக்­கி­யத்­துக்­குள்ளே இணைத்­துக்­கொள்­ளப்­ப­டாமல் புறக்­க­ணிக்­கப்­பட்­டார்கள். இது­போன்று பல்­வேறு சந்­த­ரப்­பங்­களில் இவ்­வா­றான புறக்­க­ணிப்­புக்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இரண்டு தேசியக் கட்­சி­களும் ஒரு தீர்வு வரு­வதை தவிர்த்து தாங்கள் எதிர்க்­கட்­சி­யிலே இருக்­கின்­ற­போது எதி­ராக செயற்­பட்­டார்கள்.
1994 ஆம் ஆண்டு நான் ஆட்­சிக்கு வந்­த­போது மக்கள் மத்­தி­யிலே எவ்­வா­றான அபிப்­பி­ராயம் இருக்­கின்­றது என்­பதை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக ஒரு நிகழ்ச்­சியை செய்­த­போது 23 சத­வீ­மா­ன­வர்­கள்தான் பேச்­சு­வார்த்தை மூல­மாக பிரச்­சி­னையை தீர்க்க வேண்­டு­மென்­றார்கள். மற்­ற­வர்கள் போரி­னால்தான் இதனை முறி­ய­டிக்க முடி­யு­மென்­றார்கள்.
அதன்பின் இரண்டு வரு­ட­கா­ல­மாக வெண்­தா­மரை இயக்­கங்கள் போன்ற வேலைத்­திட்­டங்­க­ளூ­டாக மக்­க­ளு­டைய மனங்­களை மாற்­று­வ­தற்கு நாம் எடுத்த முயற்­சி­களின் பல­னாக இரண்டு வரு­டங்­க­ளுக்கு பிறகு இந்த பிரச்­சினை தீர்­வு­பற்றி அபிப்­பி­ராயம் கேட்­ட­போது 68 சத­வீ­த­மா­ன­வர்கள் பேச்­சு­வார்த்­தையின் மூலம் தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென்ற தமது நிலைப்­பாட்டை தெரி­வித்­தனர்.
எனவே, அர­சியல் தலை­வர்­க­ளு­டைய அபிப்­பி­ரா­ய­மா­கட்டும், மக்­க­ளு­டைய அபிப்­பி­ரா­ய­மா­கட்டும் அதிலே மனப்­பாங்கு மிகவும் அவ­சி­ய­மா­னது. அது­மாத்­தி­ர­மல்­லாமல் மற்­ற­வர்கள் மீதுள்ள சந்­தேகம் மற்றும் அச்­சத்தை நீக்­க­வேண்­டி­ய­வர்­க­ளாக உள்ளோம்.
வெறு­ம­னேயே ஒரு பொரு­ளா­தார மீட்சி மூல­மாக மக்­க­ளு­டைய முழு­மை­யான அபி­லா­ஷை­களை அடைந்­து­விட முடி­யாது. மாறாக, அர­சியல் அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிப்­பதன் மூல­மாக அந்த மக்­க­ளுக்கு தீர்­வினை வழங்­க­வேண்டும்.
நாம் அதிகாரப் பகிர்வு யோசனை அடங்கிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தபோது விடுதலைப்புலிகள் ஒரு பக்கமாகவும், எதிர்க்கட்சி இன்னொரு பக்கமாகவும் செயற்பட்டதன் விளைவாக அதனை செயற்படுத்த முடியாது போனது.
ஆனால் இன்றைக்கு மிகவும் முக்கியமான சரித்திரத்தில் என்றுமில்லாத சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அரசாங்கத்தை அமைத்துள்ளது. அதனோடு வேறு சில கட்சிகளும் கூட அதற்கு ஆதரவாக செயற்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தி இதுவரைக்கும் நாம் அடைய முடியாதிருந்த அதிகாரப் பகிர்வின் மூலமாக அனைவருக்கும் சம உரித்து ஏற்படுத்துகின்ற ஒரு நிலையை கட்டியெழுப்புவதன் மூலமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
போரிலே வென்றதால் சமாதானம் ஏற்படப்போவதில்லை. நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்படுவதற்கான வழிமுறையை நாம் ஏற்படுத்தலாம் என நான் நம்புகின்றேன். அதற்கான சகல முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

இன்று நாம் யுத்­தத்­தில் வெற்றி பெற்­றி­ருக்­கின்றோம். ஆனால், சமாதானத்தில் வெற்றி பெறவில்லை. பல யுத்த வெற்­றி­யாளர்கள் சமா­தா­னத்தை வெற்றி கொண்­ட­தில்லை என்­பது சரித்­திரம். ஏனென்றால், “சமா­தா­னத்தை வெற்­றி­கொள்ள வித்­தி­யா­ச­மான மனப்­பாங்கு அவ­சியம்” என முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்துள்ளார்.

நேற்று மாலை பம்­ப­லப்­பிட்டி புதிய கதி­ரேசன் மண்­ட­பத்தில் இடம்­பெற்ற தந்தை செல்­வாவின் 38 ஆவது நினைவுப் பேரு­ரையில் கலந்து கொண்டு ‘யுத்தம் இல்­லை­யென்­பது சமா­தா­ன­மா­கி­வி­டாது’ என்ற தலைப்பில் உரை­யாற்­றிய போதே இவ்­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்-

“தந்தை செல்வா அவர்­களை எனக்குத் தெரியும். எனது தந்­தை­யா­ருடன் வந்து பேசி­ய­போது அவரை நான் சந்­தித்­தி­ருக்­கிறேன். டொக்டர் நாக­நா­த­னு­டைய கடைசி மகள் எனது நண்­பி­யா­க­வி­ருந்த கார­ணத்­தி­னாலே அங்கே நேரம் செல­வி­டு­கின்­ற­போது, சில­வேளை அங்­கேயும் அவரை சந்­தித்­தி­ருக்­கின்றேன். அவ­ரை­யொரு நேர்­மை­யான அர­சி­யல்­வா­தி­யென நாம் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்றோம்.

இன்று அவ­ரு­டைய நினைவுப் பேரு­ரை­யினை வழங்­கு­கின்­ற­போது இனங்­க­ளுக்கும் மதங்­களுக்கும் இடை­யி­லான பிள­வுகள், பிரச்­சி­னைகள் உலகில் ஏற்­ப­டு­கின்­றதைப் பற்றி சிலசிந்­த­னை­களை உங்­க­ளுடன் பகிர்ந்­து­கொள்­ளலாம் என நினைக்­கின்றேன். அப்­ப­டி­யான பிள­வுகள், பிரச்­சி­னை­க­ளுக்­கான கார­ணங்கள், அவற்றை தீர்த்­துக்­கொள்­வ­தற்­கான சில வழி­மு­றை­க­ளையும் பகிர்ந்­து­கொள்ள விரும்­பு­கின்றேன்.

இலங்­கையை நாம் எடுத்து நோக்­கு­மே­யானால், 1948 ஆம் ஆண்டு சுதந்­திரம் கிடைத்த நாள் முதல் பெரும்­பான்மை இனம், தன்­னு­டைய ஆதிக்­கத்தால் மற்­ற­வர்­களை புறக்­க­ணித்து அதி­கா­ரங்­களை தம்­மு­டைய கைகளில் வைத்­துக்­கொண்­டதன் கார­ண­மாக பல­வித பிரச்­சி­னைகள் எழுந்­தன. இனங்­க­ளு­டைக்­கி­டையில், மொழி­க­ளுக்­கி­டையில், மதங்­க­ளுக்­கி­டை­யி­லான புறக்­க­ணிப்­புக்­க­ளி­னாலும் அனை­வ­ரையும் இணைத்­துக்­கொள்­ளாத ஒரு மனப்­பாங்­கிலும் இந்தப் பிரச்­சி­னைகள் எழுந்­தன.

இவ்­வா­றான பல சம்­ப­வங்கள் இந்தக் கால­கட்­டத்தில் இடம்­பெற்­றன. அனை­வ­ரையும் இணைத்­துக்­கொள்­ளாமல், பெரும்­பான்­மை­யி­ன­ராக இருக்­கின்ற கார­ணத்­தி­னா­லேயே மற்­ற­வர்­களை புறக்­க­ணித்து பெரும்­பான்மை பலத்­தோடு ஆட்சி செய்­த­தனால் சிறு­பான்மை இனத்­த­வர்கள் தமது பிரச்­சி­னை­களை முன்­கொ­ணர வேண்டி ஏற்­பட்­டது.

இதன் கார­ண­மா­கத்தான் பல இடங்­களில் இந்த அநி­யா­யத்­திற்கு எதி­ராக குரல் கொடுக்க முடி­யாத நிலையில் அவர்கள் வன்­மு­றையை நாட வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­பட்­டது.

ஓர் இனத்தின் மன­தி­லே­யி­ருந்த எதிர்­பார்ப்­புகள் தகர்க்­கப்­ப­டு­மாக இருந்தால் அது வெடி­குண்­டாக மாறும் என்று ஓர் அறிஞர் கூறி­யி­ருக்­கின்றார். பெரும்­பான்மை இனம் தம்­மு­டைய அர­சியல் பலத்தை தக்­க­வைத்துக் கொள்­வ­தற்­காக ஒரு பிர­சா­ரத்தை மேற்­கொண்­டது. அதா­வது, மற்­ற­வர்கள் எதி­ரிகள் என்ற பிர­சா­ரத்தை மேற்­கொண்டு அவர்­களை எதி­ரி­க­ளாக சித்­தி­ரித்து அதன் மூல­மாக பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளு­டைய அதி­கார பலத்தை தாங்கள் வைத்­துக்­கொள்­கின்ற ஒரு யுக்­தியை பல நாடு­க­ளிலே கையாள்­வதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இலங்­கை­யிலும் அதுதான் நடந்­துள்­ளது.

சுதந்­தி­ர­ம­டைந்த காலந்­தொட்டு வடக்கு மற்றும் கிழக்கு மக்­க­ளு­டைய புறக்­க­ணிப்பு பல விதங்­க­ளிலே இருந்­தன. பொரு­ளா­தா­ர­மாக இருக்­கலாம், அர­சியல் அதி­கா­ர­மாக இருக்­கலாம், அவர்­க­ளு­டைய மேற்­ப­டிப்­பாக இருக்­கலாம், வேலை­வாய்ப்­பாக இருக்­கலாம் இவை­ய­னைத்­திலும் புறக்­க­ணிக்­கப்­பட்டு அவர்கள் வெளியில் விடப்­பட்ட கார­ணத்­தினால், இங்­கேயும் வன்­மு­றைகள் ஆரம்­பித்­ததை நாம் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

பாரா­ளு­மன்­றத்­தி­லேயும் இவ்­வாறு ஜன­நா­ய­கத்தில் எண்­ணிக்­கையில் குறை­வாக இருக்­கின்ற கார­ணத்­தி­னா­லேயே இங்கே நிலைமை மிகவும் மோச­ம­டைந்­துள்­ளது. உண்­மை­யான ஐக்­கியம் ஏற்­பட வேண்­டு­மானால் வேற்­று­மையை ஏற்­றுக்­கொண்டு அந்த வேற்­று­மையின் சிறப்பை வெளிப்­ப­டுத்­து­கின்ற ஓர் அபிப்­பி­ரா­யத்தின் மூல­மா­கத்தான் அந்த ஐக்­கியம் ஏற்­பட முடி­யுமே தவிர, வேற்­று­மை­யினால் மாறு­பட்­ட­வர்கள், மற்­ற­வர்கள் என்று அடக்­கியோ புறக்­க­ணித்தோ ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது.

இன்று நாம் போரிலே வெற்றி பெற்­றி­ருக்­கின்றோம். ஆனால் சமா­தா­னத்­தினை வெற்­றி­கொள்­ள­வில்லை. ஆனால் பல யுத்த வெற்­றி­யா­ளர்கள் சமா­தா­னத்தை வெற்­றிக்­கொள்­ள­வில்லை என்­ப­துதான் சரித்­திரம். ஏனென்றால், சமா­தா­னத்தை வெற்­றி­கொள்­வ­தற்கு வித்­தி­யா­ச­மான மனப்­பாங்கு அவ­சியம். தாழ்­மை­யாக மற்­ற­வர்­களை சேர்த்துக் கொள்­கின்ற மாறு­பட்ட சிந்­த­னைகள் அவ­சி­ய­மாக இருக்­கி­றது.

இந்த நாட்டின் சமூ­கங்கள் சுதந்­தி­ர­ம­டைந்த காலம் தொட்டு ஜன­நா­யக முறைப்­படி தங்­க­ளு­டைய உரி­மை­களை நிலை­நாட்­டு­வ­தற்­காக பல காலம் உழைத்­தார்கள், போரா­டி­னார்கள். முதலில் சம உரி­மை­களை கோரி­னார்கள். பின்னர் அது கிடைக்­கா­த­போது சமஷ்டி ஆட்சி முறையை கேட்­டார்கள். அதையும் செவி­ம­டுக்­காத போது தனி­நாடு கோரி­னார்கள். இவை­ய­னைத்தும் தொடர்ச்­சி­யாக புறக்­க­ணிக்­கப்­பட்­டதன் விளை­வா­கத்தான் வன்­முறை உரு­வா­னது.

தந்தை செல்வா அவர்கள், தமிழ் சமூ­கத்தின் உரி­மைக்­காக செய்ய வேண்­டிய அனைத்­தையும் செய்தார். பல ஒப்­பந்­தங்­களில் கைச்­சாத்­திட்டார். சிங்­கள தீவி­ர­வாதக் குழுக்கள் சிறு சிறு குழுக்­க­ளாக இருந்­த­போதும் அர­சி­ய­லிலே அந்­தந்த கால­கட்­டத்­தி­லி­ருந்த பெரும்­பான்மை கட்­சி­க­ளோடு தம்மை இணைத்­துக்­கொண்டு இந்த ஒப்­பந்­தங்­களை நிறை­வேற்­ற­வி­டாது தடுத்­தமை எமது நாட்டின் வர­லாறு.

1956 இல் சிங்­களம் மட்டும் அர­ச­க­ரும மொழி­யாக்­கப்­பட்­ட­போது அது வேண்­டு­மென்றே செய்­யப்­பட்ட ஒன்­றல்ல. வெளி­நாட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து விடு­பட்ட எமது நாட்டை சுய­மொழி, சுய­க­லா­சா­ரத்தை வெளிக்­கொ­ணர வேண்­டு­மென்ற அடை­யா­ளத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக முத­லிடம் கொடுக்­கப்­பட்­ட­துதான் உண்மை. ஆனால் அந்த நேரத்தில் விடப்­பட்ட தவறு என்­ன­வென்றால் மற்ற மொழி­களை பேசு­கின்­ற­வர்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டனர். வேற்­று­மொ­ழி­யா­கிய ஆங்­கிலம் அதி­லி­ருந்து வெளியே விடப்­பட்­டது.

இதன் கார­ண­மாக அந்தத் தரு­ணத்­தி­லே­யேயும் எண்­ணிக்­கை­யிலே சிறு­பான்­மை­யி­னர்கள் நாட்டின் ஐக்­கி­யத்­துக்­குள்ளே இணைத்­துக்­கொள்­ளப்­ப­டாமல் புறக்­க­ணிக்­கப்­பட்­டார்கள். இது­போன்று பல்­வேறு சந்­த­ரப்­பங்­களில் இவ்­வா­றான புறக்­க­ணிப்­புக்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இரண்டு தேசியக் கட்­சி­களும் ஒரு தீர்வு வரு­வதை தவிர்த்து தாங்கள் எதிர்க்­கட்­சி­யிலே இருக்­கின்­ற­போது எதி­ராக செயற்­பட்­டார்கள்.

1994 ஆம் ஆண்டு நான் ஆட்­சிக்கு வந்­த­போது மக்கள் மத்­தி­யிலே எவ்­வா­றான அபிப்­பி­ராயம் இருக்­கின்­றது என்­பதை கண்­டு­பி­டிப்­ப­தற்­காக ஒரு நிகழ்ச்­சியை செய்­த­போது 23 சத­வீ­மா­ன­வர்­கள்தான் பேச்­சு­வார்த்தை மூல­மாக பிரச்­சி­னையை தீர்க்க வேண்­டு­மென்­றார்கள். மற்­ற­வர்கள் போரி­னால்தான் இதனை முறி­ய­டிக்க முடி­யு­மென்­றார்கள்.

அதன்பின் இரண்டு வரு­ட­கா­ல­மாக வெண்­தா­மரை இயக்­கங்கள் போன்ற வேலைத்­திட்­டங்­க­ளூ­டாக மக்­க­ளு­டைய மனங்­களை மாற்­று­வ­தற்கு நாம் எடுத்த முயற்­சி­களின் பல­னாக இரண்டு வரு­டங்­க­ளுக்கு பிறகு இந்த பிரச்­சினை தீர்­வு­பற்றி அபிப்­பி­ராயம் கேட்­ட­போது 68 சத­வீ­த­மா­ன­வர்கள் பேச்­சு­வார்த்­தையின் மூலம் தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென்ற தமது நிலைப்­பாட்டை தெரி­வித்­தனர்.

எனவே, அர­சியல் தலை­வர்­க­ளு­டைய அபிப்­பி­ரா­ய­மா­கட்டும், மக்­க­ளு­டைய அபிப்­பி­ரா­ய­மா­கட்டும் அதிலே மனப்­பாங்கு மிகவும் அவ­சி­ய­மா­னது. அது­மாத்­தி­ர­மல்­லாமல் மற்­ற­வர்கள் மீதுள்ள சந்­தேகம் மற்றும் அச்­சத்தை நீக்­க­வேண்­டி­ய­வர்­க­ளாக உள்ளோம்.

வெறு­ம­னேயே ஒரு பொரு­ளா­தார மீட்சி மூல­மாக மக்­க­ளு­டைய முழு­மை­யான அபி­லா­ஷை­களை அடைந்­து­விட முடி­யாது. மாறாக, அர­சியல் அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளிப்­பதன் மூல­மாக அந்த மக்­க­ளுக்கு தீர்­வினை வழங்­க­வேண்டும்.

நாம் அதிகாரப் பகிர்வு யோசனை அடங்கிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தபோது விடுதலைப்புலிகள் ஒரு பக்கமாகவும், எதிர்க்கட்சி இன்னொரு பக்கமாகவும் செயற்பட்டதன் விளைவாக அதனை செயற்படுத்த முடியாது போனது.

ஆனால் இன்றைக்கு மிகவும் முக்கியமான சரித்திரத்தில் என்றுமில்லாத சந்தர்ப்பமொன்று ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றாக சேர்ந்து அரசாங்கத்தை அமைத்துள்ளது. அதனோடு வேறு சில கட்சிகளும் கூட அதற்கு ஆதரவாக செயற்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்தி இதுவரைக்கும் நாம் அடைய முடியாதிருந்த அதிகாரப் பகிர்வின் மூலமாக அனைவருக்கும் சம உரித்து ஏற்படுத்துகின்ற ஒரு நிலையை கட்டியெழுப்புவதன் மூலமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.

போரிலே வென்றதால் சமாதானம் ஏற்படப்போவதில்லை. நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்படுவதற்கான வழிமுறையை நாம் ஏற்படுத்தலாம் என நான் நம்புகின்றேன். அதற்கான சகல முயற்சிகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம்” என்றார்

SHARE