நாவல் திரைப்படமாகிறது!

152

 

பிரபல நாவலாசிரியர் மா.காமுத்துரை என்பவர் எழுதிய ‘முற்றாத இரவொன்றில்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம் உருவாக உள்ளது.

இந்த நாவலை திரைப்படமாக்க ‘மாநாடு’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் உரிமை பெற்றுள்ளதாகவும் இந்த திரைப்படத்தை அவரே இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் நாவல்களை வைத்து படம் எடுக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சிவாஜி கணேசன் நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ முதல் சமீபத்தில் வெளிவந்த ‘அசுரன்’ வரை பல திரைப்படங்கள் நாவலின் அடிப்படையில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE