முருங்கன் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் வைத்தியசாலையின் பணியாளர்கள் , வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர் ஆகியோருடன் கலந்துரையாடி அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதோடு அங்கு காணப்படும் அவசியத்தேவைகளை உடன் நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து அடம்பன் வைத்தியசாலை சமூகத்தினருடனும் இது போன்றதொரு சந்திப்பை மேற்கொண்டு அவர்களின் தேவைகள் பிரச்சனைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்ததோடு வைத்தியசாலையின் குறை நிறை தொடர்பிலும் சுற்றிப் பார்வையிட்டார்.
இந்த சந்தர்ப்பத்திலே வடக்கு மாகாண மீன்பிடி , போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் , மாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிறாய்வா , மன்னர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேசசபை உறுப்பினர் திரு.பரஞ்சோதி , சமூக சேவையாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் என பலர் கலந்துகொண்டனர்.