வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களின் ஒருங்கிணைப்பில் யாழ் மருத்துவ சங்கத்தின் தலைவர் வ.முரளி மற்றும் அங்கத்துவ டாக்டர்களின் பங்களிப்பில் இலவச மருத்துவ முகாம் ஒன்று 26.04.2015 ஞயிற்றுக்கிழமை விஸ்வமடு தொட்டியடி பிரதேசத்தில் நடைபெற்றது.
விஸ்வமடு தொட்டியடி பிரதேசம் விஸ்வமடுவின் சகல பிரதேசத்துக்குமான ஒரு மத்திய பின் தங்கிய பிரதேசமாகும். இங்கு நடைபெற்ற முகாம் மூலம் பெருந்தொகையான மக்கள் பிரயோசனம் அடைந்தனர்.
மேலும் ராணுவக்குளுக்கள் தொடர்ந்து சுற்றிவந்து கொண்டிருந்தனர். அவர்களை எவரும் கணக்கெடுத்ததாய் தெரியவில்லை. அது பற்றி வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களிடம் கேட்டபோது. எமது பிரதேசத்தில் நாம் ஒரு மருத்துவ முகாம் நடத்தினால் அதில் ராணுவத்தினருக்கு என்ன வேலை? இது போன்ற ராணுவ அதிகாரிகளின் அனாவசிய தலையீடுகளினால்தான் இன் நாட்டில் தொடர்ந்தும் இன நல்லினக்கம் கேள்விக்குறியாகி வருகின்றது.
மாற்றம் காண்போம் என்று சென்னார்கள்! ராணுவத்தினரின் மனங்களில் உள்ள பேரினவாத சிந்தனையை, தமிழரை அடக்கியாள வேண்டும். என்ற சிந்தனையை, எப்படி மாற்றுவது? ஒட்டு மொத்த ராணுவத்தினரையும் அகற்றி தழிழ் மக்களை தமது நாட்டில் தமது பாட்டில் வாழ விடாதவரையில் இன நல்லினக்கம் ஒரு கேள்விக்குறியே.
இனியும் ஒரு கோர யுத்தத்தின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியாத இன வாதிகள், தமிழினத்தின் சுதந்திர வேட்கையை புரிந்து கொள்ளாத அடிப்படை மதவாதிகள் அரசியலில் தாக்கம் செலுத்த முற்படுவது எமது நாட்டின் ஒட்டுமொத்த இன நல்லினக்கத்துக்கும் உதவப்போவதில்லை.