இலங்கையின் அணைத்து மாவட்டங்களிலும் தொழிளாலர் தின கொண்டாட்டம்

449

 

சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்றன. யாழ்.நகரில்… வடக்கு மாகாண கூட்டுறவாளர்களின் மேதினப் பேரணியும் பொதுக் கூட்டமும் யாழ்.நகரில் இன்று பிற்பகல் இடம்பெற்றன. நல்லூர் பகுதியில் ஆரம்பமான இந்தப் பேரணி யாழ். நகரில் உள்ள கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபத்தை அடைந்தது. தொடர்ந்து அங்கு மேதினப் பொதுக் கூட்டம் இடம்பெற்றது. மட்டக்களப்பில்… ‘தடைகளைத் தாண்டி விடைகளைக் காண்போம்’ என்ற தொனிப்பொருளில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதின பேரணி இன்று வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

මැයි පෙළපාලියට ගිය හිටපු ජනපතිනී චන්ද්‍රිකා

Posted by Newsfirst.lk on Friday, May 1, 2015

batti may day 0021

கல்லடி மணிக்கூட்டு கோபுரச் சந்தியில் ஆரம்பமாகி கல்முனை பிரதான வீதியூடாக கல்லடி உப்போடை துளசி மண்டபத்தை இந்த மேதினப் பேரணி சென்றடைந்தது. துளசி மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட மேதினக் கூட்டம் நடைபெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இப்பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை அமைச்சர் துரைராஜசிங்கம் மற்றும் உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

 

வவுனியாவில்…. வவுனியாவில் புதிய மாக்சிஸ லெலினிசக் கட்சியின் மே தின ஊர்வலம் இன்று காலை

SAMSUNG CAMERA PICTURES

 

நடைபெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய முன்றிலில் ஆரம்பித்த பேரணி பிரதான வீதி ஊடாக பஸார் வீதியைச் சென்றடைந்து அங்கிருந்து வவுனியா நகரசபை வளாகத்தை சென்றடைந்தது. அங்கு புதிய மாக்சிச லெனின் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பிரதீபன் தலைமையில் மே தினப் பொதுக் கூட்டம் இடம்பெற்றது. இதில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

மன்னாரில்… மே தினத்தை ஒட்டி தந்தை செல்வாவின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் நகரில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள முச்சந்தியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு தமிழரசு கட்சியின் மன்னார் மாவட்ட தலைவர் பரம்சோதி மலர் மாலை அணிவித்தார் மன்னார் வர்த்தகர்கள் வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானபிரகாசம், சிரேஷ்ட ஊடகவியலாளர் மக்கள் காதர், நிகழ்வின் ஏற்பாட்டாளர் பீ.ஏ.அந்தோனி மார்க் மற்றும் பல பிரமுகர்கள் உட்பட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

கல்முனையில்… அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மே தினக் கூட்டம் கல்முனை மாநகரில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தமது இணை நிறுவனங்களான வட­கிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனம், வட­கிழக்கு மாகாண அரச பொது ஊழியர் சங்கம், அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சி, ஸ்ரீலங்கா அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை தொழிற் சங்க சம்மேளனம் என்பவற்றுடன் இணைந்து இந்த மே தினக் கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்தியது. சங்கத்தினால் 21ஆவது வருடமாக நடத்தப்படும் இந்த மே தினக் கூட்டம் பொது ஊழியர் சங்கத் தலைவரும் தொழிற் சங்க வாதியூமான எஸ்.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. மே தின ஊர்வலத்திலும் கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்ற இந்த மே தினக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பேராசிரியர் எம். இராஜேஸ்வரன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர். இந்த மே தினக் கூட்டத்தில் விசேட அம்சமாக அரச சேவையிலிருந்து ஓய்வூபெற்ற சங்க உறுப்பினர்களான மூன்று தொழிலாளர்கள் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வூம் இடம்பெற்றது. நல்லாட்சியில் தொழிலாளர் உரிமைகள் நலன்கள் பாதுகாக்கப் பட வேண்டும் எனும் முதன்மைத் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த மே தினக் கூட்டத்தில் இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் துரிதப்படுத்தி வழங்குமாறு அரசைக் கோரும் தீர்மானம் உட்பட பல தீர்மானங்கள் மே தினத் தீர்மானங்களாக முன் வைக்கப்பட்டன.

அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களுட்பட வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க இணைப்பாளர்கள், அமைப்பாளர்கள் என முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்

image_handle (5)

மலையகத்தில்… உலகதொழிலாளர் தினத்தை முன்னிட்டு மலையகத்தின் பொரும்பாலான இடங்களில் தொழிலாளர் தினம் நினைவு கூரப்பட்டது. அதன் ஒருகட்டமாக புஸ்ஸல்லாவையில் கண்டி உழைக்கும் பெண்கள் முன்னனியின் மேதின நிகழ்வு நடைபெற்றது. பதுளை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் உணர்வுபூர்மாகக் கலந்து கொண்டனர். முன்னியின் உப தலைவி எம்.மகேஸ்வரி, செயலாளர் கி.யோகேஸ்வரி, கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம், சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி சந்தனம் சத்தியநாதன், தோட்ட தொழிலாளர்கள், ஸ்தாபனமயப்படாத தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

SHARE