அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரி இன்று சனிக்கிழமை காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். அமெரிக்காவுக்கு சொந்தமான போயிங் 757 என்ற விமானத்தின் மூலம் இன்று காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடன் 35பேர் அடங்கிய குழுவொன்றும் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜோன் கெரி உள்ளிட்ட குழுவினரை விமான நிலையத்தில் வைத்து இலங்கையின் வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார்.