தமிழர்கள் நாம் தலை சாய்ந்ததாக சரித்திரமில்லை! விழ விழ எழுந்தவர்கள் ஈழத்தமிழர்கள்!

375

 

சுயநிறைவான, தன்னில் தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமுகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம், மக்கள் தம்மைத் தாமே ஆளும் உரிமையுடைய சனநாயக ஆட்சி முறையையே நான் விரும்புகின்றேன். இந்தப் புதிய சமுகத்தில், உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவவேண்டும்.

– தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்-

10987344_949705211740768_3246011011882766929_n

11193382_949705251740764_4385877585510241536_n 11209654_949705261740763_5640772006517288206_n

சர்வதேச முதலாளித்துவ பொருளாதார வர்க்கம் ஒரு முறம், இனவாத, சர்வதிகார ஒடுக்கு முறைக்கும் இடையில் மக்கள் புது உலகம் என்று சொல்லப்படும், இரண்டாம் உலகப்போருக்கு பின் இன்றுவரை ௬௪ வருடங்களாக ஆதிகார சக்திகளுக்கு ஆட்பட்டு உலகெங்கும் இனப்படுகொலைகளும் ஏழ்மையும் உலகெங்கும் தலைவிரித்து ஆடுகிறது.

தமிழர்களின் கட்டுபாட்டில் தமிழீழம் இருந்த போது, புரட்சிகர மாற்றங்களை கண்டோம், தமிழர் பிரதேசங்களில் பொருளாதார கட்டுபாடு இருந்த போது தமிழர்கள் சகல பாதுகாப்புடன், தன்னிறைவு கொண்ட வாழ்கையை வாழ்ந்தார்கள். தமிழீழத்தில் நடந்த வாழ்வு மாற்றங்கள், வல்லரசுகளின் உதவிகள் எதுவும் இன்றி ஒரு புதிய உலகத்தை ஏற்படுத்த முடியும் என்பதை ஈழத் தமிழர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

இந்த தன்னிறைவை தான் இன்று உலகம் அழித்து.

தமிழர்கள் நாம் தலை சாய்ந்ததாக சரித்திரமில்லை! விழ விழ எழுந்தவர்கள் ஈழத்தமிழர்கள்!

SHARE