தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை 10.00 மணியளவில்
வவுனியாவில் வன்னியின் விடுதியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரியின் சந்திப்பின் பின் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்தியா வலியுறுத்தி வருகின்ற 13வது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் அமையவிருக்கின்றன. இதனை எவ்வாறு செயற்பாடுத்துவது தொடர்பில் இந்த மத்தியகுழுக் கூட்டம் மூடிய அறைக்குள் நடந்துகொண்டிருக்கின்றது. அமெரிக்காவினுடைய செயற்பாடுகளை இல்லாதொளிக்கும் ஒரு திட்டமாகவும் தமிழரசுக் கட்சியினுடைய மத்தியகுழுக் கூட்டம் அமையப்பெறலாம். இது இவ்வாறு இருக்க வடமாகனசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களுக்கு இந்த மத்தியகுழுக் கூட்டத்தில் பங்குகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேநேரம் இளைஞர் அணியின் தலைவர் சிவகரனுக்கு இத் மத்தியகுழுக் கூட்டத்தில் பங்கு கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருவருமே தமிழரசுக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இருக்க சிவகரனுக்கு மட்டும் அழைப்புவிடுக்கப்பட்டதன் தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தாயகம், சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி பற்றி பேசுபவர்களுக்கு எதிராகவும் அன்மைக்கால தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயமாகும். அன்மைக்காலமாக அனந்தியினுடைய செயற்பாடுகள் தமிழரசுக் கட்சிக்கு எதிராக அமைந்திருந்தமையால் அவரை இந்த மத்தியகுழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுவிக்கப்படாது இருந்திருக்கலாமென்று நம்பப்படுகின்றது.