சர்வதேச தொழிலாளர் தினம் 01-05-2015 வெள்ளி காலை 6:30 மணிக்கு பேசாலை கடற்கரையில் விசேட திருப்பலியுடன் ஆரம்பமானது. இன் நிகழ்விற்கு மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினதும், பங்குச் சபையினதும் விசேட அழைப்பின் பேரில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மீன்பிடி கிராமமான பேசாலையில் தொழிலாளர் தினத்தை ஒழுங்கு செய்து சிறப்புற நடாத்தியதுடன் திருப்பலி நிறைவில் திருச் சுரூபம் படகில் கடல்வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பனவும் ஆசீர்வதிக்கப்பட்டது. இவ் விசேட நிகழ்வில் கிராம மக்கள் அனைவரும் ஒருமித்து திரண்டு நின்றமை குறிப்பிடத்தக்கது.