தன் மகனுக்காக அந்த படத்தை தானே வாங்கி வெளியிடவிருக்கின்றாராம் டி.ஆர்.

423

தமிழ் சினிமாவில் 80களில் கொடி கட்டி பறந்த இயக்குனர்களில் டி.ராஜேந்தேர் அவர்கள். இவர் தன் மகன் சிம்புவை சினிமாவிற்காகவே வளர்த்தார் என்று கூட சொல்லலாம்.

ஆனால், சிம்பு சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்காமல் பல படங்களுக்கு ஒரே நேரத்தில் கால்ஷிட் கொடுத்து தொடர்ந்து தவறு செய்து கொண்டே வருகிறார். இந்நிலையில் இவர் நடித்த வாலு திரைப்படம் 2 வருடங்களுக்கு மேலாக ரிலிஸாகாமல் உள்ளது.

இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது தன் மகனுக்காக அந்த படத்தை தானே வாங்கி வெளியிடவிருக்கின்றாராம் டி.ஆர். இப்படம் வெளிவருவதற்கே பல கஷ்டம் இருந்த நிலையில், டி.ஆர் மகனுக்காக பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

SHARE