ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் 3 விரைவில் வெளியீடு

384

 

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஏர்பாட்ஸ் 3 விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி மே 18 ஆம் தேதி அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டு அறிக்கை மூலம் புது ஏர்பாட்ஸ் 3 மாடலை அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இது புதிய வயர்லெஸ் இயர்போன் மேம்பட்ட டிசைன் கொண்டிருக்கும் எனவும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படாது எனவும் தெரிகின்றது.

அதுமட்டுமின்றி இதே தினத்தில் ஆப்பிள் மியூசிக் சேவையில் ஹை பிடிலிட்டி வசதியை அறிவிக்கும் என கூறப்படுகிறது.

அந்த மியூசிக் சேவையில் புதிதாக ஹை பிடிலிட்டி வசதியை வழங்க இருப்பதாகவும் ஹைபை சேவைக்கான கட்டணம் 9.99 டாலர்களாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த அம்சம் அதற்கேற்ற ஹார்டுவேர் கொண்ட சாதனங்களில் மட்டுமே இயங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

SHARE