வவுனியாவில் வயோதிபர் தூக்கிட்டு தற்கொலை

367

வவுனியா கற்குளியில் வயோதிபர் ஒருவர் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இறந்தவர் சதாசிவம் சபாபதிப்பிள்ளை (வயது 61) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில் நீண்டகாலமாக சதாசிவம் சபாபதிப்பிள்ளை நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் கடந்த மூன்று நாட்களாக நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதாகவும் அதன்காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டனர்.

இச்சம்பவம் குறித்து வவுனியா திடீர் மரணவிசாரணை அதிகாரி கிசோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை நடத்தியதுடன் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு அனுப்பும்படி உத்தரவிட்டார். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

unnamed (1)

SHARE